உயர் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எட்டு பேருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் எட்டு பேருக்கே உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் , குதிரைப்படைக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம், நிதி மோசடி பிரிவு, காலி பிராந்தியம், விநியோகப் பிரிவு, பிரமுகர் பாதுகாப்பு பிரிவு, அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றிற்கு பொறுப்பானவர்களும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் , மனித உரிமைகள் பிரிவு, நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு, பொலிஸ் பயிற்சி பிரிவு, மொனராகல பிராந்தியம், முல்லைத்தீவு பிராந்தியம், பொலிஸ் கடற்படை பிரிவு ஆகிய பிரிவுகளுக்குமான
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com