வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு பெருவிழாவுக்கு முதன் முறையாக இந்தியாவில் இருந்து சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனத் ஆண்டகை இம்முறை கலந்து கொள்ளவுள்ளதாக யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கச்சதீவு பெருவிழா முன்னாயத்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே குரு முதல்வர் இதனை தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்தும் இலங்கையில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்களும் குருக்களும், துறவியர்களும் இம்முறையும் திருவிழாவில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
கச்சத்தீவு திருவிழா இம்மாதம் 14, 15ஆம் திகதிகளில் நடாத்தப்படவுள்ளது.
Link : https://namathulk.com