உக்ரைன்மீது ரஷ்யா மிக அதிகளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடாத்திவருகின்ற நிலையில், மீண்டும் உக்ரைன் ஒரு “மாபெரும் ஏவுகணை மற்றும் ட்ரோன்” தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“மின்சாரம் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்களைத் தாக்கி சாதாரண உக்ரேனியர்களை காயப்படுத்த ரஷ்யா முயற்சிக்கிறது, வெளிச்சம் மற்றும் வெப்பம் இல்லாமல் எங்களை விட்டுச்செல்லும் இலக்கை கைவிடாமலிருக்கும் சாதாரண குடிமக்களுக்கு மிகப்பெரிய தீங்கை ரஷ்யா விளைவிக்கிறது” என்று சமூகவலைத்தளப் பதிவு ஒன்றில் உக்ரைன் எரிசக்தி அமைச்சர் ஹெர்மன் ஹாலுஷ்செங்கோ தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மூன்று ஆண்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் நடைபெறும் என்று கூறியிருந்த நிலையில் குறித்த இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
போரின் போது உக்ரைனின் மின் கட்டமைப்பை ரஷ்யா பலமுறை குறிவைத்துள்ளது.
இந்த தாக்குதல்கள் மின்சார உற்பத்தித் திறனைக் குறைத்து, முக்கியமான வெப்பமாக்கல் மற்றும் நீர் விநியோகத்தைச் சீர்குலைத்துள்ளன.
பொதுமக்களின் மன உறுதியை அழிக்கும் முயற்சியில் ரஷ்யா “குளிர்காலத்தை ஆயுதமாக ஏந்தியதாக” உக்ரேனிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தை ஜெலென்ஸ்கி வரவேற்றுள்ள நிலையில் புதிய செலவினங்களில் சில உக்ரைனின் சொந்த பாதுகாப்புத் துறையை வலுப்படுத்த பயன்படுத்தப்படலாம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Link : https://namathulk.com/