சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லக்கூடிய இடமாக நுவரெலியா காணப்படுகிறது.
இங்குள்ள சூழல் மற்றும் காலநிலை அதிக சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியதாகவே உள்ளது.
இந்நிலையில் நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் துறையாகவும் சுற்றுலாத்துறை காணப்படுகிறது.
ஆகவே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் நுவரெலியா நகரில் உள்ள சுற்றுலா ஹோட்டலொன்றின் களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளது
நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவு தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
தீயினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது .
எனினும் குறித்து அறையில் வைக்கப்பட்டிருந்த சமையல் உபகரணங்கள் , இலத்திரனியல் உபகரணங்கள், தளபாடங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com