அமெரிக்க அரசாங்கம் கிரிப்டோ நாணயத் திட்டங்களில் பிட் காயினை வாங்குவதற்கான திட்டங்களில் சேர்க்கப்படாத காரணத்தால் அதன் பங்குகள் 06 சதவிகிதம் வரை சரிவடைந்தது.
கடந்த வியாழக்கிழமை வெளியான டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து பிட் காயின் பங்குகள் 84,900 டொலர் வரை குறைந்த பிறகு, கிரிப்டோகரன்சி சுமார் 87,700டொலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
அமெரிக்காவை “கிரகத்தின் கிரிப்டோ தலைநகரமாக” மாற்றுவதற்கான தனது அறிவிப்புக்களை டிரம்ப் மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்க அரசாங்கம் சுமார் 200,000 பிட்காயின்களை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பிட்காயினின் முன்கூட்டிய விற்பனை ஏற்கனவே அமெரிக்க வரி செலுத்துவோருக்கு 17 பில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட டிரம்ப் மீம் நாணயம் உட்பட அவரது குடும்பம் கிரிப்டோ செல்வத்தில் பில்லியன் கணக்கான டொலர்களை சேகரித்துள்ளது,.
இந்த நிலையில் பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோ நாணயங்களின் விமர்சகர்கள் இந்தச் சொத்துக்களுக்கு உள்ளார்ந்த மதிப்பு இல்லை என்று எச்சரித்துள்ளனர்.
Link : https://namathulk.com