ஸ்பேஸ்எக்ஸின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் விண்கலம் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விண்வெளியில் வெடித்தது.
இதனால் புளோரிடாவின் சில பகுதிகளில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
ஸ்டார்ஷிப் அதன் இயந்திரங்கள் துண்டிக்கப்பட்டு கட்டுப்பாடில்லாமல் சுழலத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விண்வெளியில் ஸ்டார்ஷிப் பிரிந்த பிறகு, தெற்கு புளோரிடா மற்றும் பஹாமாஸ் அருகே வானில் எரிந்ததாகக் கூறப்படுகிறது.
வியாழக்கிழமை பிற்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அறிக்கையில், ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்ஷிப் அதன் பின்புறப் பகுதியில் ஒரு “ஆற்றல்மிக்க நிகழ்வை” அனுபவித்ததாகவும், இதன் விளைவாக பல இயந்திரங்கள் செயலிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்டார்ஷிப் திட்டமானது மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் எலோன் மஸ்க்கின் திட்டத்தின் மையமாக உள்ளது.
ஸ்டார்ஷிப் விண்வெளியிலேயே வெடித்த நிகழ்வானது, மஸ்க் இந்த ஆண்டு விரைவுபடுத்த முயன்ற திட்டத்திற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
Link : https://namathulk.com