2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடி வகுப்புகள் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, முன்னோடி பயிற்சிகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் என்பன அதற்கு பின்னர் நடாத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல்களை மீறுவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ளது.
Link : https://namathulk.com