ஒஸ்ட்ரியா நாட்டுப் பெண்ணிடம் இலஞ்சம் பெற்ற கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சார்ஜன் ஒருவரும், இரண்டு கான்ஸ்ரபள்களும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் சட்டவிரோதமாக வைத்திருந்த வெளிநாட்டு சிகரட்டுக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காது, அவரிடம் 50,000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு பெண்ணின் சுற்றுலா வழிநடத்துனர் ஊடாக சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களை கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com