பஸ் நடத்துனர் ஒருவரால் மாணவர்களை அச்சுறுத்தும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஹட்டன் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கினிகத்தேன பகுதியில் இருந்து ஹத்ட்டன்நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் , மாதாந்த பருவசீட்டு வைத்திருந்த மாணவர்களை குறித்த பஸ்சின் நடந்துனர் அச்சுறுத்தியுள்ளார்.
பஸ்ஸில் ஏறிய மாணவர்களை உடனடியாக இறங்குமாறு கூறியுள்ளார்.
எனினும் மாணவர்கள் இறங்காது, சம்பவத்தை ஒளிபதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஹட்டன் நோக்கி பயணிக்கும் அநேகமான அரச பஸ்கள் மாணவர்களை ஏற்றுவதில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பஸ்சின் நடத்துனர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த நபருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வெறுமனே பாடசாலை வளங்களை விஸ்தரிப்பது மாத்திரம் போதுமானதல்ல.
Link : https://namathulk.com