குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஹர்ஷா நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்
இதன்போது, தண்டனை சிறுவர்களின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்துடன், வன்முறை பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று குழந்தைகள் நம்பினால், அவர்கள் அந்த நம்பிக்கையை முதிர்வயதுக்கும் கொண்டு செல்வார்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் பலர் உடைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், உடைந்த சிறுவனை சரிசெய்வது எளிது, ஆனால் உடைந்த பெரியவரை சரிசெய்வது எளிதான காரியமல்ல எனவும் அமைச்சர் கூறினார்.
Link: https://namathulk.com