பெண்களின் முன்னேற்றத்திற்கு யாரேனும் தடை விதிக்க முற்பட்டால் அதற்கு எதிராக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் படை எடுக்கும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இந்த ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.
பெண்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கருத்து தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் பெண்கள் , சிறுவர்கள் வலுவூட்டல் செயற்பாடுகள் தொடர்பிலும், அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இதன்போது தெளிவுப்படுத்தினார்.
Link : https://namathulk.com