இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளிநாட்டிற்கு பொதிகளை விநியோகம் செய்யும் EMS சேவை முறைமை நாடளாவிய ரீதியில் அறிமுகம் செய்துவருகிறது.
அதன் அடிப்படையில் நுவரெலியா தபால் நிலையத்தில் இன்று EMS பரிமாற்ற செயற்பாட்டினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளனர்.
இதன் முதற்கட்டமாக நுவரெலியா தபால் நிலையத்தில் தொழில் புரியும் ஊழியர்கள் இணைந்து பொது மக்களுக்கு தெளிவூட்டல், தகவல்கள் உள்ளடக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்தனர்.
இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச தபால் அத்தியட்சகர் டி.எம். ஜீவிக்க திஸாநாயக்க கலந்துகொண்டார்.
இவ்வாறு அறிமுகம் செய்த ஈ.எம்.எஸ் பொதிகள் விநியோகமானது வெளிநாட்டில் உள்ள உறவுகளுக்கு மிகக் குறைந்த விலையில் மிகவும் பாதுகாப்பாக மிக விரைவாக பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.
இந்த சேவை தொடர்பான மேலதிக உதவிகளை பெற 1950 என்ற துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த முறையை நுவரெலியாவில் சந்தைப்படுத்தும் குழுவிற்காக தனியான வாட்ஸ்ப் செயலியில் பயன்படுத்த QR குறியீடு ஒன்றினையும் வெளியீடு செய்துள்ளனர்.
Link : https://namathulk.com