யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடத்தை யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முற்றுகை இட்டுள்ளனர்.
இச்சம்பவத்தோடு தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினார்
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், கஞ்சா கலந்த மாவா பாக்கு 4கிலோ, பீடித்தூள் 12கிலோ மற்றும் வாசனை திரவியம் 24ரின்
போன்ற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com