யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வளி மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம், வடமராட்சி மற்றும் யாழ் நகரப் பகுதிகளில் தொடர்ந்தும் வளி மாசுபட்ட நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
யாழ் மாவட்டத்தின் வளிமண்டலத்தில் மாசடைந்த வளி காணப்படுவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் 151(AQI ) புள்ளிகள் அளவில் மாசு நிலை பதிவாகியிருந்தது.
சாதாரணமான மாசற்ற வளி தரச்சுட்டி 0-50(AQI ) ஆக காணப்பட வேண்டும் என்ற குறிகாட்டி நிலையிலிருந்து கடந்த ஜனவரி மாதம் யாழ் மாவட்டத்தின் வளி தரச்சுட்டி 151 (AQI ) என்ற அபாய கட்டத்தை காட்டியிருந்தது.
பின்னர் பெப்ரவரி மாதம் அளவில் குறிகாட்டி 88 (AQI ) ஆக குறைவடைந்து, தற்போது யாழ் பழைய பூங்கா பிரதேசம் (நகரம்) மற்றும் வடமராச்சி கரவெட்டி பிரதேசம் 55(AQI ) ஆக குறிகாட்டி காட்டி நிற்கிறது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படக் கூடிய சுவாச சிக்கல்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுவாச பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் தேவையான மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது சிறந்ததாகும்.
Link : https://namathulk.com