வடக்கின் பெருஞ் சமர் என அழைக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு இடையிலான 118 வது கிரிக்கெட் போட்டியில் சென்.ஜோன்ஸ் அணி வெற்றி வாகை சூடியது.
யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதலாவது இன்னிங்ஸில் 131 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து, துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி, 142 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து, 93 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி, 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், வெற்றி இலக்கை கடந்தது.
118 ஆவது ஆண்டாக இம்முறை இடம்பெற்ற இந்த கிரிக்கெட் போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெற்றிவாகை சூடிய அணியினர் மகிழ்ச்சியில் திகைத்த போது அங்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியும் பறந்தமை பார்வையாளர்களின் திசையை திருப்பியது.
விஜய் ரசிகர்களும் களத்தில் குதித்ததாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Link: https://namathulk.com