தென்னிந்திய பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் இலங்கை வருகை தொடர்னில் விமான நிலையத்தில் கிலுக்கிய நிழற்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தியின் படப்பிடிப்புகள் இலங்கையில் இடம்பெறவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் நடிக்கும் இயக்குனர் சுதா கொங்கராவின் பீரியட் படமான பராசக்தியின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் முடிவடைந்துள்ளது.
இந்த படபிடிப்புகள் நிறைவடைந்த போது தமது இலங்கை பயணம் தொடர்பில் ரவி மோகன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
பராசக்தி திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
1960களின் மெட்ராஸை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் அதர்வா மற்றும் ஸ்ரீலீலாவும் நடிக்கின்றனர்.
சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் கதை விரிவடைவதை படத்திற்கான முன்விளக்கக் காட்சிகள் பிரதிபலித்துள்ளன.
SK25 (சிவகார்த்திகேயனின் 25வது படம்) என்று முன்னர் குறிப்பிடப்பட்ட பராசக்தி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது
Link: https://namathulk.com