உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
இதன்போது, 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் கோருதல் இப்போது நிறைவுச் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அத்துடன், 4,872 மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் நடத்தப்படும் எனவும், மொத்தம் 17,296,330 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Link: https://namathulk.com