கேகாலை, வரகாபொல பொலிஸ் பிரிவின் எத்னாவல பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வரக்காபொல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவராவார்.
தனது சகோதரரின் வீட்டில் நடந்த அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது, அயல்வீட்டாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது குறித்த நபர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரைக் கைது செய்ய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com