இந்திய நடிகை இரன்யா ராவ் தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 14 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான விசாரணையின் போது தங்கக் கடத்தலில் ஈடுபட்டுள்ள சர்வதேச பெண்கள் கும்பல் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை இரன்யா ராவ் அம்பலப்படுத்தியுள்ளார்.
எல்லைதாண்டி செயற்படும் கடத்தல் குழுவில் தாமும் செயற்பட்டதாக இரன்யா ராவ் ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன் இந்த கடத்தலில் பல அரச அதிகாரிகளும் இணைந்து செயற்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
கடத்தலுடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கன்னடத் திரைப்பட நடிகையான இரன்யா ராவ், பல படங்களில் நடித்துள்ளார்.
அன்மைக்காலமாக இரன்யா ராவ் தொடர்பான பல தகவல்கள் கசிந்துள்ள நிலையில் இந்திய ஊடகங்களில் அடிக்கடி தலைப்பிடப்படும் பெயராகவும் இவர் காணப்படுகின்றார்.
Link: https://namathulk.com