நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகள் : ஐவர் கைது
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, உலுக்குளம் பகுதியில் நடத்திய சோதனையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27 மற்றும் 32 வயதுடையவர்கள் என பொலிசார் குறிப்பிட்டனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி, எல்பிட்டிய, பகுதியில் நடத்திய சோதனையில், டி-56, ரிவால்வர் வகை துப்பாக்கி மற்றும் மூன்று சுற்று டி-56 வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் 44 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை மொனராகலை, தம்பகல்ல, கொல்லதெனிய பகுதியில் நடத்திய சோதனையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் கங்கோடகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிசார் கூறினர்.
கொழும்பு, கொட்டவெஹர பகுதியில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கல்லேகொட பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்தனர்.
பதுளை, எல்தெனிய, சுவத உயன அருகே உள்ள மின் பரிமாற்ற கோபுரத்திற்கு அருகிலுள்ள ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 மிமீ துப்பாக்கி மற்றும் 9 மிமீ வெடிமருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com