களுத்துறை, மித்தெனிய பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, நேற்று குட்டிகல பகுதியை சேர்ந்த, 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டில் மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com