வடமாகாணத்திற்கு அபிவிருத்தியை கொண்டு வரும் நோக்கில் இதுவரை காலமும் இடம்பெற்ற அரசாங்க நிறுவனங்களின் சில மீண்டும் செயற்படுத்த முடிந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக குறைந்த பங்களிப்பை வழங்கிய குறித்த நிறுவனங்கள் ஊடாக பாரிய அளவில் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனேவும் அவர் கூறியுள்ளார்.
உத்தேசிக்கப்பட்ட புதிய கைத்தொழில் நகரம் ஒன்றுக்காக அவசியமான திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
காங்கேசந்துறை கைத்தொழில் பூங்கா, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சீமெந்துத் தொழிற்சாலை உட்பட திட்டங்கள் சிலவற்றை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மேற்பார்வை செய்தனர்.






Link: https://namathulk.com