செயற்பாடுகள் இன்றி அழிந்து காணப்பட்ட முல்லைத்தீவ, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக குறித்த தொழிற்சாலையின் பழைய இயந்திர சாதனங்களை திருத்தம் செய்து நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் புதிய உபகரணங்களை கொள்வனவு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தால் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது திட்டம் இது என்பதுடன், இதனூடாக இப் பகுதி மக்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகளை வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.













Link: https://namathulk.com