துபாயில் நடைபெற்ற 09வது சர்வதேச சாம்பியன்ஸ் டிராபி துடுப்பாட்டப்போட்டிகள் நேற்றைய தினத்தோடு நிறைவடைந்திருந்த நிலையில், இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது.
இந்திய அணி 03வது தடவையாகவும் சர்வதேச சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்று, சர்வதேச சாம்பியன்ஸ் டிராபியை அதிக முறை வென்ற அணி என்ற மாபெரும் உலக சாதனையை
சொந்தமாக்கியது.
இந்திய அணி ஏற்கனவே 2002, 2013ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 252 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தொடரை வெற்றி கொண்டு சாம்பியனாகியது.
Link: https://namathulk.com