இலங்கை தொழிலாளர் காங்கிரசும், தொழிலாளர் தேசிய சங்கமும் மலையக மக்களுக்கு குரல் கொடுத்த அமைப்புகளாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டன் செனன் தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கி வைத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
தேசிய கட்சிகளுக்கு கட்டுபாடு உள்ளதாகவும் அதனை மீறி செயற்பட முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து போட்டியிடுவதற்கு கலந்துரையாடி கொண்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வெளி மாவட்டங்களில் தனித்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
Link: https://namathulk.com