நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இருந்து வெளிநாட்டுப் பெண் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.
இதல்கஸ்ஹின்ன சுரங்கத்திற்கு அருகில் குறித்த பெண் ரயிலில் இருந்து வீழ்ந்து காயமடைந்துள்ளார்.
35 வயது சீனப் பெண் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்து ஹப்புத்தளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தலையை வெளியில் போட்டவாறு பயணித்த குறித்த பெண் சுரங்கத்தில் மோதியதில் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Link: https://namathulk.com