இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் 2023ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள் எனவும் எஸ்.ஜே. சூர்யா அல்லது செம்பன் வினோத் ஜோஸ்
ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த நிலையில் 15 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.