யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல யூடியூபர் கிருஷ்ணா உள்ளிட்ட நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மல்லாகம் நீதவானால் இவர்களுக்கான விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மக்களுக்கு உதவி செய்யும் காணொளிகளை தமது யூடியூப் தளத்தில் பதிவேற்றும் கிருஷ்ணா, இறுதியாக பதிவேற்றிய காணொளி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.
பெண்பிள்ளை ஒருவரிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தும் காணொளியால் கிருஷ்ணா சர்ச்சைக்குள் சிக்கிக்கொண்டார்.
இந்நிலையில் குறித்த காணொளியை பதிவு செய்த வீட்டிற்கு நேற்று அவர் சென்ற போது கிராம மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட யூடியூபர் கிருஷ்ணா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் அவர் உள்ளிட்ட நான்கு பேர் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Link: https://namathulk.com