மாஸ்கோவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்துடன் தொடர்புடைய இரண்டு நபர்களை நாட்டை விட்டு வெளியேற ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் உளவுத்துறைப் பணிகளைச் செய்து வருவதாகக் கூறி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவையை மேற்கோள் காட்டி, பிரிட்டிஷ் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் மற்றும் மற்றொரு பிரிட்டிஷ் தூதரின் மனைவி என இருவர் vஎளியேற்றப்பட்டதாக அரச செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம், ரஷ்யா தீங்கிழைக்கும் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில் விளாடிமிர் புடினின் முழு அளவிலான உக்ரைன் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து பல இங்கிலாந்து அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.