இந்திய உதவித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 4,700 வீடுகள் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, 10,000 வீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக பெருந்தோட்டத்துறை வீடுகள் கட்டப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல் தலையீடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும், இம்முறை அதிக வெளிப்படை தன்மையுடனேயே இச்செயற்பாடு முன்னெடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும், நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு அதிகளவிலான முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
தோட்ட வீட்டுவசதி மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 1.3 பில்லியன் ரூபா உள்நாட்டு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com