ஐந்து நகரங்களில் வளியின் தரம் இன்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிதமான மட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆரோக்கியமற்ற மட்டத்திலிருந்து மிதமான மட்டத்திற்கு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் ஏனைய பகுதிகளில் காற்றின் தரம் மிதமான மட்டங்களுக்கு இடையில் இருக்கும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கூறியது.
Link: https://namathulk.com