மட்டக்களப்பு, துறைநீலாவணை குளப்பகுதியில் தினமும் ஆடு மாடு மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, பெரியநீலாவணைச் சந்தியில் இருந்து துறைநீலாவணை நோக்கி செல்லும் பிரதான வீதியின் இடப்பக்கமுள்ள குளக்கரையில் தினமும் இத்தகைய குப்பைகள் அடையாளம் காணாத சிலரால் கொட்டப்பட்டு வருகிறது.
அங்கு குப்பை கொட்ட வேண்டாம் என்று மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை அறிவித்தல் பலகை போட்டுள்ள போதிலும், இச்செயற்பாடு தொடர்ந்து இடம்பெற்றவண்ணமுள்ளது.
இந்நிலையில் வெறுமனே பதாகையை இட்டால் மாத்திரம் போதுமானது இல்லை என தெரிவித்துள்ள கிராம மக்கள், இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Link: https://namathulk.com