பாதிக்கப்பட்டிருந்த மலையக ரயில் சேவை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த மலையக ரயில் சேவை இன்று காலை 8.30 மணி முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
நாவலப்பிட்டி பல்லேகம பகுதியில் நேற்று மாலை 6.00 மணியளவில் ரயில் தடம் புரண்டதால், மலையக ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
இரவு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு சென்ற தபால் ரயில் சேவை கம்பளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
மேலும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சென்ற இரவு நேர தபால் ரயில் இன்று காலை வரை நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது என நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
ரயில் தடம் புரண்டதால் ரயில் பாதைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது நிலைமை சரி செய்யப்பட்டு மலையகத்திர்கான ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com