வீதிகளில் குப்பைகளை கொட்டுவதால் சூழல் மாசடைவதுடன், நோய்களும் ஏற்படுகிறது.
விசேடமாக நகர்புரங்களில் உரிய வழிமுறைகளை பின்பற்றாது, வீதிகளில் குப்பைகள் கொட்டுவதை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் யாழ்ப்பாணம் மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் முதற்கட்டமாக வீதிகளில் குப்பைகளை கொட்டுவோரை அவதானிப்பதற்கு சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 20 கேமராக்களை பொருத்துவதற்குரிய நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது
இதனூடாக குப்பைகளை வீதிகளில் கொட்டுவோரை துல்லியமாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாநகர சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Link: https://namathulk.com