கண்டி – மஹியங்கனை பகுதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சிலிருந்து டீசல் திருடியமைக்காக பஸ்சின் சாரதியும் நடத்துநரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி,மஹியங்கனை டிபோவில் பணிபுரியும் 58 வயது சாரதியும், 24 வயது நடத்துநருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
குறித்த நபர்கள், மஹியங்கனை தொடக்கம் திஸ்ஸபுர வரை பயணிக்கும் (இலக்கம் என்.ஏ 1296) பஸ்சில் இருந்து 10 லீற்றர் டீசல் திருடியதாக டிப்போ அதிகாரியினால் பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பஸ்சின் டீசல் தாங்கியிலிருந்து 10 லீற்றர் டீசல் திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com