அநுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் துஸ்பிரயோக விவகாரத்துடன் தொடர்புடைய பெண் வைத்தியரின் தனியுரிமையை மதித்து செயற்பட வேண்டும் என வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தனது சமூக வலைதளத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
குறித்த பெண் வைத்தியரின் அடையாளத்தை வெளியிடுவதைத் ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்துள்ளார்.
இவ்வாறான விடயங்களில் உணர்வுபூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பியோடிய சந்தேகநபர், வைத்தியரை அவரது பணி அறைக்குள் சென்று கத்தி முனையில் அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Link : https://namathulk.com