உலக பயங்கரவாத தரக் குறியீட்டுக்கு அமைய உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
12வது வருடாந்த உலக பயங்கரவாத தரக் குறியீட்டு அறிக்கையின்படி, பரிசீலிக்கப்பட்ட 163 நாடுகளில் இலங்கையை 100வது இடத்தை பெற்றுள்ளது.
இதன்படி, தெற்காசிய பிராந்தியத்தில் பூட்டான் மற்றும் இலங்கைக்கு மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளன
2024ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகளே அதிக பயங்கரவாத அச்சுறுத்தல்கள் கொண்ட நாடாக பட்டியல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த முன்னேற்றத்திற்கு ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்ததே முக்கிய காரணம் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மோசமான பயங்கரவாத குறியீடுகளை கொண்ட பத்து நாடுகளில் இரண்டு நாடுகள் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com