கடந்த ஆண்டு ஏழு நாடுகள் மட்டுமே உலக சுகாதார அமைப்பின் (WHO) வளித் தரக் கணிப்பில் சிறப்பாக இருந்தாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சுவிஸ் வளித் தரக் கண்காணிப்பு நிறுவனமான IQAir தொகுத்த புள்ளிவிவரங்களின்படி, சாட் மற்றும் பங்களாதேஷ் 2024 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளாக இருந்தன, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை விட சராசரி தர நிலைகள் 15 மடங்கு அதிகமாக இருந்தன.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பஹாமாஸ், பார்படோஸ், கிரெனடா, எஸ்டோனியா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய 07 நாடுகள் மட்டுமே சிறந்த வளித் தரவரிசைச் சுட்டெண்ணுக்குள் இடம் பெற்றுள்ளன என்று IQAir தெரிவித்துள்ளது.
சாட் நாடானது 2022 ஆம் ஆண்டில் சஹாரா தூசி மற்றும் கட்டுப்பாடற்ற பயிர் எரிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதால் மிகவும் மாசுபட்ட நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டது. ஆனால் 2023ஆம் ஆண்டின் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டது.
சாட், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசுக்கு அடுத்தபடியாக வளித் தரவரிசையின் பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் உள்ள நாடாக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது.
வளி மாசுபாட்டை அதிகரிப்பதில் காலநிலை மாற்றம் அதிகம் தாக்கம் செலுத்துகின்றது, அதிக வெப்பநிலை காரணமாக தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் கடுமையான மற்றும் நீண்ட காட்டுத் தீ ஏற்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
Link : https://namathulk.com