ஒரு மூத்த புத்த துறவியின் ஆன்மா அவரது மரணத்தின் போது ஒரு குழந்தையின் உடலில் மறுபிறவி எடுக்கிறது என்று திபெத்திய பாரம்பரியம் கூறுகிறது. தற்போதைய தலாய்லாமா இரண்டு வயதாக இருந்தபோது அவரது முன்னோடியின் மறுபிறவி என்று அடையாளம் காணப்பட்டார்.
தற்போதைய தலாய்லாமாவின் வாரிசு சீனாவுக்கு வெளியே பிறப்பார் என்று திபெத்திய புத்த மதத்தின் ஆன்மீகத் தலைவர் ஒரு புதிய புத்தகத்தில் தெரிவித்தார்,
உலகெங்கிலும் உள்ள திபெத்தியர்கள் 89 வயதான தலாய்லாமாவின் மரணத்திற்குப் பிறகும் தலாய்லாமாவின் நிறுவனம் தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
புத்தகமொன்றில் முதன்முறையாக தலாய்லாமா தனது வாரிசு சீனாவுக்கு வெளியே என்று அவர் விவரிக்கும் “சுதந்திர உலகில்” பிறப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் முன்பு திபெத்துக்கு வெளியே, ஒருவேளை அவர் நாடுகடத்தப்பட்ட இந்தியாவில் தான் மறுபிறவி எடுக்க முடியும் என்று மட்டுமே கூறியிருந்தமை முக்கியமானது.
“மறுபிறப்பின் நோக்கம் முன்னோடியின் பணியைத் தொடர்வது என்பதால், புதிய தலாய்லாமா சுதந்திர உலகில் பிறப்பார், இதனால் தலாய்லாமாவின் பாரம்பரிய பணி, அதாவது உலகளாவிய இரக்கத்திற்கான குரலாக இருக்க வேண்டும், திபெத்திய புத்த மதத்தின் ஆன்மீகத் தலைவர் மற்றும் திபெத்திய மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய திபெத்தின் சின்னம் தொடரும்” என்று தலாய்லாமா எழுதியிருக்கிறார்.
மாவோ சேதுங்கின் கம்யூனிஸ்டுகளின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 14வது தலாய் லாமாவான டென்சின் கியாட்சோ, தனது 23வது வயதில் ஆயிரக்கணக்கான திபெத்தியர்களுடன் 1959இல் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார்.
திபெத்திய கொள்கையை உயிர்ப்புடன் வைத்திருந்ததற்காக 1989 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற தலாய்லாமாவை சீனா “பிரிவினைவாதி” என்று குறிப்பிடுகின்ற நிலையில், ஜூலை மாதம் தனது 90 வது பிறந்தநாளில் தனது வாரிசு பற்றிய விவரங்களை வெளியிடுவதாகக் கூறிய தலாய்லாமா, தனது தாயகம் “அடக்குமுறையான கம்யூனிஸ்ட் சீன ஆட்சியின் பிடியில்” இருப்பதாகவும், திபெத்திய மக்களின் சுதந்திரத்திற்கான பிரச்சாரம் எதுவாக இருந்தாலும் தொடரும்” என்றும் எழுதியுள்ளமை முக்கியமானது.
Link : https://namathulk.com