கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி துஷாரி ஜெயசிங்க, நேற்று நாவலப்பிட்டியிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
டிப்போவில் உள்ள தற்போதைய பணியாளர் பற்றாக்குறை மற்றும் குறைபாடுகளை ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இந்த கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, பஸ் பழுது மற்றும் பராமரிப்புக்காக மதிப்பிடப்பட்ட தொகையை விட அதிகமாகச் செலவிட்டுள்ளதாகவும், தினசரி இயக்கத்திற்கு போதுமான பஸ்கள் இல்லாததால் வருவாய் குறைந்துள்ளதாகவும் , இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் , பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர்.
அத்துடன், நாவலப்பிட்டி டிப்போ நீண்ட தூர மற்றும் குறுந்தூர பயணங்களுக்காக பல பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ள போதிலும், அடிக்கடி ஏற்படும் இயந்திரக் கோளாறுகளால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி சாலையிலுள்ள பணியாளர் பற்றாக்குறை மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்து போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடி உடனடி தீர்வுகளை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது உறுதியளித்தார்.
Link : https://namathulk.com