கொட்டும் மழையில் திருகோணமலை, மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

Aarani Editor
1 Min Read
ஆர்ப்பாட்டம்

திருகோணமலை, மூதூர் வலயக்கல்வி பிரிவிலுள்ள பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயத்தில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் சுமார் இரண்டு மணித்தியாளங்களாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயத்தில் 352 மாணவர்கள் கல்வி கற்பதோடு, இது க.பொ.த. சாதாரண தரம் வரையான மாணவர்கள் கற்கும் பாடசாலையாகும்.

இந்த பாடசாலையில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சமயம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதோடு இது தொடர்பாக கிராம மக்கள் அதிகாரிகளிடம் பல்வேறு தடவைகள் கோரிக்கை முன்வைத்த போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்திற்கு மூதூர் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் தேவதாஸ் ஜெயந்தன் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித் கலந்துரையாடினார்.

இதன்போது, மூதூர் வலயத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாகவும், இதுதொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஒரு குழுவொன்றை மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு வருகை தருமாறு பிரதிக் கல்விப் பணிப்பாளர் கூறினார்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து களைந்து சென்றனர்.

அத்துடன், பிரதிக் கல்வி பணிப்பாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டடோரால், மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *