கொழும்பு, கடுவலை பகுதியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தில், கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து சர்வதேச அளவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், சர்வதேச அளவில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, 143 தோட்டாக்கள், ஒரு ரிவால்வர் மற்றும் ரிவால்வருக்கு பயன்படுத்தப்படும் 09 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுவரையில் சம்பவத்தோடு தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com