இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி `நான்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் பெரு வரவேற்பைப் பெற்றது.
இவரது 22வது திரைப்படமான ‘ககன மார்கன்’ வெளியாக உள்ள நிலையில், இவரது 25வது திரைப்படத்தை அருண் பிரபு இயக்குகிறார்.
இதற்கு சக்தித் திருமகன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அருண் பிரபு இதற்கு முன் அருவி மற்றும் வாழ் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது சக்தித் திருமகன் திரைப்படத்தின் முன்னோட்டம் எதிர்வரும் 12ஆம் திகதி மாலை 05 மணியளவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Link : https://namathulk.com