உக்ரைன் நாடானது, ரஷ்ய தலைநகரில் தனது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலைத் நடாத்தியது,
குறைந்தது 91 ட்ரோன்கள் கொண்டு மாஸ்கோவை குறிவைத்து நிகழ்ந்த தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலியாகியிருக்கலாம் என்றும் மூவர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ பிராந்தியத்தில் 91 ட்ரோன்களும் மற்றும் குர்ஸ்க் பிராந்தியத்தில் 126 ட்ரோன்களும் உட்பட மொத்தம் 337 உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்யாவின் மீது விழுந்துள்ளன.
இதன் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டதோடு விமானங்களைத் திசை திருப்ப வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாஸ்கோ குறைந்தது 21 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய பெருநகரங்களில் ஒன்றாகும்.
“மாஸ்கோ மீது எதிரி ஆளில்லா விமானங்களின் மிகப் பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது” என்று மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ள நிலையில், மாஸ்கோவில் பீதிக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இயல்பு நிலையில் இயங்குவதாகச் சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் மாஸ்கோ மற்றும் முக்கிய பிரதேசங்களின் மீது வான் வழித் தாக்குதல்களை சமாளிக்க எண்ணற்ற மின்னணுக் குடைகளை ரஷ்யா உருவாக்கியுள்ளதாம்.
Link : https://namathulk.com