வரலாற்று சிறப்புமிக்க அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவை நடாத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
திருவிழாவிற்க செல்லும் படகுகளுக்கு தற்காலிக இறங்கு துறைகளை அமைத்தல், குடிநீர் வசதிகள் அமைத்தல், சுகாதார வசதிகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல், மின்சார வசதிகள் அமைத்தல், மருத்துவ வசதி உள்ளிட்ட உட்கட்மைப்பு வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நேற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இன்றையதினம், பெருவிழாவிற்கு வரும் மக்களுக்கு தகவல் தொடர்பு வசதிகளை வழங்குவதற்காக, கச்சத்தீவில் தகவல் தொடர்பு கோபுரத்தை நிறுவும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீவு மற்றும் கரையோர பகுதிகளில் சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், பாதுகாப்பு கெமராவினை நிறுவும் பணி நிறைவடைந்துள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 14,15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.


Link : https://namathulk.com