தெற்கு மெக்ஸிகோவில் சிறிய நகரமான சாண்டோ டொமிங்கோ நார்ரோவுக்கு வெளியே நடந்த பேரூந்து விபத்தில் 11பேர் பலியாகியுள்ளனர்.
பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து தலைகீழாக புரண்ட காரணத்தால் இவ் விபத்து ஏற்பட்டுள்லதாக ஓக்ஸாக்கா மாநிலத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த பேரூந்து 40 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்றதாகவும், மெக்ஸிகோவின் தெற்கில் உள்ள டெஹுவான்டெபெக்கின் இஸ்த்மஸுக்குச் செல்வதற்காக பயணத்தை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரித்து வருவதாக மாநில அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Link : https://namathulk.com