பல்வேறு குற்றங்களுக்காக தேடப்படும் சந்தேக நபர்களுக்கு உதவி அல்லது தங்குமிடம் வழங்குவது தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை பொலிஸ் எச்சரித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு தொடர்பான குற்றங்கள் குறித்து பணமோசடிச் சட்டம் மற்றும் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளின் கீழ் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.
எனவே, தேடப்படும் சந்தேகநபர்களுக்கு உதவி செய்யும் அல்லது அடைக்கலம் அளிக்கும் நபர்கள் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Link: https://namathulk.com