பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுதல் மற்றும் மருந்துகள், அத்தியாவசிய உணவு, மற்றும் பாடசாலைப் பொருட்களுக்கான வரிக்குறைப்பு உள்ளிட்டவற்றை வாக்குறுதி அளித்தபடி அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி யாழில் இன்று கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மத்திய பஸ் நிலையம் முன்றலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் இயக்க பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், எந்த ஒரு அரசாங்கத்திலும் இல்லாதது போல இம்முறை தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் கொண்ட அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் உள்ளதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டோர் தெரிவித்தனர்.
Link : https://namathulk.com