சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினால் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த பேரணியானது பான்ட் இசையுடன் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பித்து கிட்டுப்பூங்கா வரை நடைபவனியாக சென்றது.
பின்னர் கிட்டுப் பூங்காவில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு மகளிர் தினம் ஆரம்பமானது.
இப்பேரணியில், யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Link: https://namathulk.com