அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரொருவர் நேற்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் வைத்து பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் நபரை உடனடியாக கைது செய்யுமாறு வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய பாராளுமன்ற அமர்வில் இவ்விடயம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியிருந்தார்.
இவாறான சம்பவங்களால் வைத்தியசாலைகளில் பெண் வைத்தியர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழும்புவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.
இதனால், பொது சேவையில் பணியாற்றும் பெண்கள் சிரமத்திற்கு ஆளாவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பில் நமது ரி.வி செய்திப் பிரிவி , அநுராதபுரம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வினவியது.
சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
Link : https://namathulk.com
